இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிவரை தொடரும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் ஏப்ரல் 5ஆம் திகதியே இலங்கையை வந்தடையும் .நாட்டில் எரிபொருள் முற்றாகத் தீர்ந்து விடாது என்றும், ஆயினும் தட்டுப்பாடு காணப்படும்.பொதுமக்கள் இந்தக் காலப்பகுதியில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றார்.
அதேநேரம் ஆளும் பொதுஜன பெரமுனவின் பிறிதொரு அமைச்சரான ரோஹித அபேகுணவர்த்தன, நாட்டில் எரிபொருள் இல்லையென்று யாராவது கூறினால் அது அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் நாட்டின் உண்மை நிலையை மறைத்து, தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைக்கவே முயன்று கொண்டிருக்கின்றனர் என்றும், அதனாலேயே நாடு இந்த நெருக்கடி நிலைமைக்குச் சென்றுள்ளது என்றும் பலரும் சுட்டிக்காட்டுக்கின்றனர்.
Discussion about this post