இலங்கையில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாங்குவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்படுகின்றது என்று அவர் கூறினார்.
ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிரித்துள்ளதால், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது என்றும் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நாட்டில் தற்போது என்ன எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் நீங்கி விடும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் பின்னர் நாட்டில் எரிபொருளை கொள்வனவு செய்ய மக்கள் வரிசைகளில் நிற்பதும் இல்லாமல் போய்விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இரண்டு தினங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் காமினி லொக்குகே, நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அனுப்பப்படும் எரிபொருள் கொள்கலன் வண்டிகள், எரிபொருளை இறக்குவதற்கு இடமில்லாத காரணத்தால், திரும்பி வருகின்றன என்று அமைச்சர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் மற்றும் மண்ணெண்ணைய் என்பவற்றுக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர். எரிபொருள் கிடைக்காமையால் நாட்டின் பல இடங்களில் மக்கள் வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post