புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்துக்கு, இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6 வருடங்களுக்குள் 5 ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக உற்பத்தி செய்து, தேசிய மின்கட்டமைப்புடன் சேர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அதானி நிறுவனம் இந்தத் திட்டத்துக்கு முதற்கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ளது. புதிய வீடுகள் நிர்மாணித்தல், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுதல் காரணமாக வருடாந்தம் 5 வீதம் முதல் 8 வீதம் மின் தேவை அதிகரிக்கின்றது.
இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை மேற்கொள்ள ஆர்வமுள்ள முதலீட்டாளர்களில் தகுதியானவர்களைத் தெரிவு செய்யவும், திட்டங்ளை முன்னெடுப்பதற்கு காணப்படும் சட்ட சிக்கல்களை நீக்குதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வினைத்திறனான ஆற்றல் வலையமைப்பு இணைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்தும் அமைச்சரவை உபகுழு கவனம் செலுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
Discussion about this post