வீதிகளை மறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் விநியோக நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தப்படுமாயின், அந்த நிலையத்துக்கு எரிபொருள் விநியோகிக்காதிருக்க கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் 10 நாள்களுக்குள் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் பெட்ரோல் கப்பல்களும் வருகை தரவுள்ளன. அதில் 92, 95 ரக பெட்ரோல் உள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி சந்தைகளுக்கு எரிபொருளை விநியோகிக்க முடியும் என்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
வீதிகளை மறித்து நிரப்பு நிலையங்களின் ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படும் வகையில் மக்கள் செயற்படுவார்களாயின், இந்த நடைமுறைகள் யாவும் சீர்குலையும் என்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post