விரைவான பொருளாதார மீட்சியை உறுதி செய்வதற்கும் கடன் பேண்தகு தன்மையை உறுதி செய்வதற்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கைக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாறும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை கைவிடும் நீண்டவரலாறு இலங்கைகு உள்ளது. ஆளும் பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஏனைய இடதுசாரிக்கட்சிகளும் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதேவேளை வலதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன.
தற்போது ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, நாங்கள் விரும்புகின்றோமோ இல்லையோ நாங்கள் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும், சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்துகொள்வதை நாங்கள் ஏற்கவில்லை என நாடாளுமன்றத்தின் எந்த உறுப்பினரோ அல்லது கட்சியோ தெரிவித்தால் நாங்கள் உங்கள் தீர்வு என்ன? மாற்றுதிட்டம் என்ன? என அவர்களிடம் கேள்வி எழுப்பவேண்டியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Discussion about this post