இந்த அரசாங்கத்தை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்க முடியாது என்பதை எதிரணியினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதனால் அவர்கள் இப்போது போராட்டங்களை விரும்பவில்லை.
எதிரணி அரசியல்வாதிகளும், அவர்களின் சகாக்களும்தான் இப்போது வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். எதிரணியினர் தங்கள் சுயலாப அரசியலுக்காகவே போராட்டங்களை நடத்துகின்றனர்.
ஆனால் போராட்டங்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அவசியமற்ற இந்தப் போராட்டங்களை நிறுத்தி விட்டு, நாட்டை மீளக்கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என்று எதிரணிக்கு நான் மீண்டும் அழைப்பு விடுகின்றேன் எனத் தெரிவித்தார்.
Discussion about this post