நாட்டு மக்களுக்கு யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பானஉண்மைதன்மையை
கூறியதற்காக தமதுபதவிகளை ஜனாதிபதி பறிப்பாராக இருந்தால் அது
தொடர்பில் தாம் வருத்தமடையபோவதில்லை என கூறிய அமைச்சர்
கம்மன்பில, அமைச்சுப் பதவிகளைவிட நாட்டின் பாதுகாபே முக்கியமெனவும்
ஜனாதிபதிக்குகூறியுள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய
கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சரவையில் யுகதனவி மின் உற்பத்தி
நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றமத்தில் வழக்கு பதிவு செய்தது, அந்தத்தீர்மானத்தை விமர்சித்தமை போன்றன பிழையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த கூற்று தொடர்பில் ஊடகமொன்றுக்குக்பதிலளித்த
போதே அமைச்சர் கம்மன்பில இவ்வாறு கூறினார். மேலும் பதிலளித்த அவர், யுகதனவி தொடர்பில் அமைச்சரவையில் பத்திரம் எதுவும்
தாக்கல் செய்யப்படவோ, அமைச்சரவையில் கலந்துரையாடவோ இல்லை. இந்த பிரச்சனையில் நாட்டு மக்களுக்கு நாம் உண்மையை மாத்திரமே எடுத்து கூறினோம் என கூறினார்.
Discussion about this post