எந்தவொரு தரப்பினதும் மிரட்டல்களுக்கு அச்சம் கொள்ளப் போவதில்லை கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடிய ராஜதந்திரி ஜெனீபர் லைன் சீனாவிலிருந்து நாடு கடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒட்டாவாவில், ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடா மீதும் கனேடிய மக்கள் மீதும் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதனை தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனாவிற்கு பயணம் செய்யும் கனேடியர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், பயண அறிவுறுத்தல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும்ட எனவும் வெளிவிவகார அமைச்சர் மிலெனி ஜோலி தெரிவித்துள்ளார். சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் அண்மைய நாட்களாக முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post