நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு
சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம்
வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட
வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து
வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு திறக்கப்படும்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கே சென்றால் இந்தத் தொற்றை
முடிவுக்கு கொண்டுவர முடியாது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு
சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால், பொருளாதார
நடவடிக்கைகளை முன்னெக்கும்போது அந்தந்த பிரிவினரால் தற்போதே திட்டமொன்று
வகுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
திட்டம் வகுக்கப்பட்டால் மட்டுமே நாட்டை திறக்க முடியுமா என்பது குறித்து
தீர்மானிக்க முடியுமென்றும் அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டை திறப்பதில்
சிக்கல் நிலை ஏற்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post