ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய எதிர்காலத்தில் நாட்டினுள் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தற்போது முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அதன்படி, மருந்துப் பொருட்களின் பெறுகை செயற்பாடுகளை செயல்திறன் மிக்கதாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் மருந்து பொருட்களின் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்த தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மருத்துவத்துறை பற்றிய அவதானம் தற்காலத்தில் மேம்பட்டுக் காணப்படுவதாகவும் உலகளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் இலங்கையின் வைத்தியத்துறைக்கான அர்பணிப்புக்களுக்கு பாராட்டு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post