இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் நேற்று நடந்த கூட்டத்தில் அவரது கட்சியான பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுந்தொனியில் வாக்குவாதப்பட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளில் இருந்து தங்கள் சொத்துக்காளைக் காப்பாற்ற, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் கடுமையாகக் குற்றச்சாட்டியுள்ளனர்.
ஜனாதிபதியின் ஜோதிடர் ஞானாக்காவின் வீட்டுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரை உடனடியாக அழைத்துள்ளார்.
பொலிஸ் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இருப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போகக் கூடும் என மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் அரசாங்கத்தை எச்சரித்திருந்தேன் என்று பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்னவும் ஜனாதிபதிக்கு காரசாரமான விளக்கத்தைக் கொடுத்தார் என்று அறியமுடிகின்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைப் பாதுகாக்கத் தவறிய இராணுவத் தளபதியும், பொலிஸ் மா அதிபரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுடன், பல இழிவான கருத்துக்களைனக் கூறிப் பொலிஸாரை வசைபாடினர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பலத்த யோசனைக்கு ஆளாகியுள்ளார் என்று கூறப்படுகின்றது. ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Discussion about this post