நியூசிலாந்தில் தன் செல்ல நாய்க்கு வரம்பில்லாமல் உணவளித்ததால், பெண் ஒருவருக்கு இரண்டு மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குறித்த பெண் அவருடைய நாய்க்கு வரம்பில்லாமல் உணவளித்ததால், அந்த நாய் எடை அதிகமாகி உயிரிழந்துள்ளது. உயிரிழக்கும் போது நாயின் எடை 53 கிலோ இருந்ததாக கூறப்படுகிறது.
விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு வழக்கறிஞர் நுகையின் சார்பாக அதன் உரிமையாளரை குற்றம் சாட்டி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தலையிட்டார்.அதேசமயம் சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு நாய்களை வளர்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post