பிங்க் நிறத்தில் போலி வாட்ஸ்அப் குறித்து கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
உங்கள் பழைய பச்சை நிற வாட்ஸ்அப்பின் தோற்றத்தை பிங்க் நிறத்தில் மாற்றவேண்டுமா, அத்துடன் புதிய வாட்ஸ்அப் அம்சங்களும் உங்களுக்கு கிடைக்கவேண்டுமா? அதற்கு புதிய Pink WhatsApp-ஐ உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்யுங்கள் என, ஒரு போலியான லிங்க் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் சமீபத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. மோசடி செய்பவர்கள் பலருக்கு இந்த இணைப்பை WhatsApp மூலமாகவே அனுப்புகிறார்கள்.
இந்நிலையில், மும்பை காவல்துறை ‘பிங்க் வாட்ஸ்அப்’ குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பிங்க் வாட்ஸ்அப் தொடர்பான இந்த புதிய மோசடி குறித்து அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
பிங்க் வாட்ஸ்அப்புக்கான Link-ஐ கிளிக் செய்யவோ அல்லது பிங்க் வாட்ஸ்அப் ஆப்பை பதிவிறக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது மால்வேர் மென்பொருள். இதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்ய முடியும். போலி லிங்கை கிளிக் செய்யும் பயனர்கள் பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என மும்பை காவல்துறை எச்சரித்துள்ளது.
இணைப்பைக் கிளிக் செய்பவர்களின் தொடர்பு எண்கள் மற்றும் சேமிக்கப்பட்ட படங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும். உங்கள் நிதி இழக்கலாம், ஸ்பேம் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் மற்றும் மொபைல் சாதனங்களின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழக்க நேரிடும்.
தப்பிக்க என்ன செய்யவேண்டும்?
இதில் இருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது, மொபைலில் டவுன்லோட் செய்த போலியான செயலியை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
அறியப்படாத மூலங்களிலிருந்து வரும் இணையத்தள இணைப்புகளின் நம்பகத்தன்மையை நீங்கள் சரிபார்க்கவில்லை என்றால், அவை வேலை செய்யும் வாய்ப்பு அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
அதிகாரப்பூர்வ Google Play Store, iOS App Store அல்லது முறையான இணையதளங்களிலிருந்து மட்டுமே ஆப்ஸை இன்ஸ்டால் அல்லது அப்டேட் செய்யவேண்டும்.
சரியான அங்கீகாரம் அல்லது சரிபார்ப்பு இல்லாமல் மற்றவர்களுக்கு இணைப்புகள் அல்லது செய்திகளை அனுப்ப வேண்டாம்.
உள்நுழைவு சான்றுகள், கடவுச்சொற்கள், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் இணையத்தில் உள்ள எவருடனும் தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களைப் பகிர வேண்டாம். சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்காமல் கவனமாக இருங்கள்.
Discussion about this post