ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாடு டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறினாலும், ஒரு கணினியைக் கூட வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
எனினும் ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருட்டு
சுகாதாரத்துறையில் இடம்பெற்ற திருட்டுகளை மையமாக வைத்து ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்த போது அந்த திருடனை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் 113 பேர் ஒன்றுணைந்தனர்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களை போன்றவர்கள்தான் என எண்ணுவது பிழையான நிலைப்பாடு ஆனால் ஊழல் வாதியை பாதுகாக்க 113 பேர் முன்நின்றது உண்மையே.
மேலும் நாட்டிலுள்ள கல்வி முறையில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடாது.இலவசக் கல்வியை வலுப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post