ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குடு்பட்ட வேலணை, அம்பிகைநகரில் ஹெரோய்ன் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டது.
750 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
சந்தேகநபருக்கு பிணை அனுமதி வழங்கிய நீதிமன்று, பொலிஸாரால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறையிட முடியும் என்று தெரிவித்தது.
அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஹெரோய்ன் போதைப் பாவனை அதிகரித்துள்ளது என்று பல தரப்புகளாலும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post