அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களத்தின் படி, 2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 75 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்குள் உலகம் முழுவதும் 08 பில்லியன் மக்கள் வாழ்வார்கள் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனாலும், இந்த ஆண்டு உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகின்றதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு நொடிக்கும் 4.3 பிறப்புகள் பதிவாகும் போது, 02 இறப்புகள் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் அமெரிக்காவின் மக்கள் தொகை 1.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.
Discussion about this post