உலகின் மிகவும் விலையுயர்ந்த சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் (Rolls-Royce Boat Tail) முதல் முறையாக துபாயில் வீதியொன்றில் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த காரின் பெறுமதி 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இலங்கை ரூபாயில் அதன் மதிப்பு 918 கோடி ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஓசியானிக் ப்ளூ’ நிறத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார், மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒருவரால் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இசைத் தம்பதிகளான ஜே-இசட் மற்றும் பியோனஸ், இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவதற்கு அணுகிய மூன்று வாடிக்கையாளர்களில் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாடல் கார் அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், முதன்முறையாக மூன்று வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்க முன்வந்துள்ளனர்.
மேலும் அந்த வாடிக்கையாளர்களின் அடையாளத்தை இரகசியமாக வைக்க ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய காரின் அறிமுக விழாவில் பேசிய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது,
“போட் டெயில் எங்களின் லட்சிய திட்டமாகும். வாடிக்கையாளர்களுடன் இணைந்து, சாத்தியம் பற்றிய அனைத்து முன்கூட்டிய கருத்துகளையும் புறக்கணித்து புதிய தரநிலையில் அமைக்கப்பட்டுள்ளது.”
மே 2021 இல் வெளியிடப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சாலையில் முதலாவது கார் ஓட்டுவதைக் காண முடிந்தது.” என்று அவர் கூறியுள்ளார்.
28 மில்லியன் டொலருக்கு மேலான விலைக் குறியுடன், 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் போட் டெயில் உலகின் மிக விலையுயர்ந்த காராக சாதனை படைத்துள்ளது.
இந்த காரை வடிவமைக்க நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டதோடு, ரோல்ஸ் ராய்ஸ், போட் டெயிலுக்காக 1,813 முற்றிலும் புதிய பாகங்களை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post