உலகிலேயே மிக நீளமான சைக்கிளை தயாரித்து டச்சு பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.இந்த சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் 180 அடி நீளத்தில் உருவாக்கியுள்ளனர்.இதனையடுத்து இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
உலகின் நீளமான சைக்கிள்இந்தநிலையில், டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த 39 வயதான இவான் ஷால்க் தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்ற கனவை இப்போது நனவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனை கடந்த 60 ஆண்டுகளில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது.முதன் முறையாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் (Germany) 26 அடி நீளத்தில் உலகின் முதல் நீளமான சைக்கிள் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post