கனடாவின் நியூபவுன்ட்லாண்ட் பகுதியில் உலக போரின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு தொகுதி பாரிய குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த குண்டுகள் கனடிய கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
போர் காலத்தில் மூழ்கிய அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ரக்ஸ்ரன் மற்றும் யு.எஸ்.எஸ். பொலுக்ஸ் ஆகிய கப்பல்களின் இடிபாடுகள் அமைந்துள்ள பகுதிகளில் சுமார் 12 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குண்டு 227 கிலோ கிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் 1942 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ம் திகதி நீரில் மூழ்கியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இரண்டாம் உலக போரின் போது நியூபவுன்ட்லாண்டில் அமெரிக்க கடற்படை முகாமொன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post