நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் அதிகளவான சத்துக்களையும் நன்மைகளையும் உள்ளடக்கியது என்று கூறவேண்டும், குறிப்பாக உருளைக்கிழங்கு.
உருளைக்கிழங்கை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது உடற்பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று கூறினாலும் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
அதிலும் குறிப்பாக உருளைக்கிழங்கு சாறு எடுத்துக் குடித்தால் அது இன்னும் சிறந்தது.
இது கண் வீக்கம், கருவளையம் போன்ற பிரச்சினைகளை போக்கும் தன்மை கொண்டது.
உருளைக்கிழங்கு சாற்றினால் என்னென்ன நன்மைகள்
சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்துவதற்கு உருளைக்கிழங்கு சாறு உதவும்.
உருளைக்கிழங்கு சாறு மூளையின் செயற்பாட்டை மேம்படுத்த உதவும், காரணம் அதில் விட்டமின் பி சத்து இருக்கின்றது.
உருளைக்கிழங்கில் கால்சியம், துத்தநாகம், விட்டமின் கே போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவும்.
அசிடிட்டி பிரச்சினை ஏற்படும்போது 100 மில்லி வரையில் உருளைக்கிழங்கு சாறை பருகலாம். காரணம் உருளைக்கிழங்கு சாறு வயிற்றில் அமிலத்தன்மையை சீராக்கும்.
முகம், கண்கள் போன்றன வீங்கியிருந்தால், உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தலாம். இது வீக்கத்தைக் குறைக்கும்.
உருளைக்கிழங்கின் சாற்றை உச்சந்தலையில் தடவி வருவதன் மூலம் பொடுகு பிரச்சினையை சரி செய்யலாம்.
ஒரு க்ளாஸ் உருளைக்கிழங்கு சாற்றை பருகுவதன் மூலம் ஒரு நாளைக்குத் தேவையான விட்டமின் சி சத்தை பெற்றுவிடலாம்.
தோல் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு பெரிதும் உதவியாக இருக்கும்.
Discussion about this post