உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன (Nilanda Jayawardene) கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு இன்று (18) முதல் நடைமுறைக்கு வருவதாக தேசிய காவல்துறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதிபர் உதவி சேவை
தற்போது நிலந்த ஜயவர்தன சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராக (நிர்வாகம்) கடமையாற்றி வருகின்றார்.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக செயற்பட்ட நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் உதவி சேவைகளுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி இடமாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post