எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக வரிசையில் காத்திருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்னறி உயிரிழந்தார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிண்ணியா – முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, மத்துகம பகுதியிலும் எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழந்துள்ளார்.
Discussion about this post