உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் பயணிகள் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (18) உத்தரபிரதேசம், கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 4 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடம் புரண்டு விபத்து
சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லும் சண்டிகர்- திப்ரூகர் அதிவேக தொடருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தினால் 10 முதல் 12 தொடருந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளதில் பயணிகள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்புப் பணிகள்
இந்தநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படையினர் பயணிகளை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து தொடர்ந்தும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post