இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நேற்று விசேட உரை ஒன்றை நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைமைக்குச் சென்றே மீளும் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, ஒரிரு மாதங்கள் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மின் துண்டிக்கப்படும் நேரம் 15 மணித்தியாலங்கள் கூட அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர், குறுகிய காலத்துக்கு இந்தப் பிரச்சினை தொடரும் என்றும், பண வீக்கம் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரச பணியாளர்களின் சம்பளத்தைக் கூட வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ள பிரதமர், விருப்பம் இல்லாது பணத்தை அச்சி அனுமதித்துள்ளேன் என்று கூறினார்.
ஒரு நாளைக்கு மட்டுமே பெற்றோல் கையிருப்பு உள்ளது என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எவ்வாறோ நிதியைத் திரட்டி எரிபொருள் கப்பல்களுக்கு கட்டணம் செலுத்துகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நான் செல்வது கத்தி மேலுமு், கண்ணாடிப் பாலத்திலும் நடப்பது போன்று சவாலானது என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, எனது கடமையை நாட் நாட்டுக்காகச் செய்து முடிப்பேன் என்றும் கூறினார்.
Discussion about this post