இலங்கையில் நாளாந்தம் 10இல் 4 குடும்பங்கள் போதியளவு உணவு உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் அண்மைய அறிக்கையொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியானது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் உணவு உண்பதை விட்டு விலகிச் செல்வதாகவும் இந்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்காலத்தில் இந்நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகலாம் என உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
Discussion about this post