உலக நாடுகளில் வானிலையானது இதற்கு முன்னர் காணப்படாதவாறு கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் பல நாடுகளில் உணவு உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, தனது உள்நாட்டில் அரிசி விலையேற்றத்தை தவிர்க்க, அநேக வகையான அரிசிகளுக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து சீனா வரையில் கடும் வெப்பம் நிலவி வருவதோடு எல் நினோ எனும் பருவகால வானிலை மாற்றங்கள் கடுமையாக பொது மக்களை பாதித்து வருகிறது .
இந்நிலை இன்னும் தீவிரமடையலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடைபெற்று வரும் போர் காரணமாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கோதுமை, சோளம் உட்பட தானிய ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கும் ‘கருங்கடல் ஒப்பந்தம்’ எனும் உடன்படிக்கையிலிருந்து ரஷ்யா வெளியேறியுள்ளமையும் பல நாடுகளின் உணவு உற்பத்தியில் தாக்கம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில், உலகின் பல நிறுவனங்களில் வேலையில்லா நிலைமையும் உருவாகி வருகிறது.
இது போன்ற காரணங்களால் உணவு பொருட்களின் கையிருப்பு குறைவதும், அவற்றின் விலை பாரிய அளவில் அதிகரிப்பதும், அதிக இலாபத்தை பெறும் நோக்கில் வர்த்தகர்கள் உணவுகளை பதுக்குவதும் போன்ற செயல்கள் இடம்பெற்று வருகின்றன.
இவற்றின் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வெப்பத்தால் தொடர் வறட்சி, பெருமழையால் வெள்ளம் என வானிலை மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் விவசாயிகள் , பொது மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள்
Discussion about this post