Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த திட்டம்!!

October 23, 2022
in இலங்கை
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த திட்டம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போசணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மக்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துதல் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல், நேற்றுமுன்தினம் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தலைமையில் நடைபெற்றது.

சமய ஸ்தலங்களை மையமாகக் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கூடாக 14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவுகளிலும் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சு ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படும் உணவு பரிமாற்ற மையமானது, அந்தப் பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய தேவைக்கு அதிகமான உணவுகளை சேகரித்து உணவு வங்கிக்கு வழங்கும். பின்னர் அந்த உணவு, உணவு வங்கியூடாக உணவு பற்றாக்குறையுடைய குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும்.

இந்தச் செயற்பாட்டின் மூலம் தேவைக்கதிகமாக உள்ள உணவை பிரதேச வாசிகளிடையே மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களில் உள்ளவர்களிடையேயும் பகிர்ந்தளிக்க முடியும் என்பதால் உணவு வீண் விரயம் செய்யப்படுவதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Tags: உணவு வங்கிகள்உணவுப் பாதுகாப்புமத வழிப்பாட்டுத் தலம்
Previous Post

மதில் இடிந்து வீழ்ந்து ஒருவர் சாவு!!

Next Post

வெளிநாடு நழுவிய பெரமுன எம்.பிக்கள்!

Next Post
வெளிநாடு நழுவிய பெரமுன எம்.பிக்கள்!

வெளிநாடு நழுவிய பெரமுன எம்.பிக்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.