நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும். இந்த நிலை தொடருமாயின் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் உணவுப் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக உணவுத் திட்டத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையிலே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கமைய, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் செப்ரெம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதற்கமைய, கொழும்பின் நகர்ப்புறங்களில் உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கலாம். அது உணவுப் பாதுகாப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை இந்த நிலைமை மேலும் மோசமடையும். இதனால், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான உதவித் திட்டங்களை மேலும் செயற்படுத்த உலக உணவுத் திட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றுள்ளது.
Discussion about this post