இலங்கை உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் கொழும்பில் உணவு முற்றாக தீர்ந்துவிடும் என கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு நகரிலுள்ள 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் உணவு நெருக்கடி அவசரகால நிலைக்கு சென்றுள்ளதால் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தால் இயக்கப்படும் உணவு வங்கியிடம் இலங்கை நேற்று அவசர உணவு உதவியை கோரியுள்ளது.
இந்த நிலையிலேயே எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் கொழும்பில் உணவு முற்றாக தீர்ந்துவிடும் என கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post