எரிவாயு நெருக்கடி காரணமாக உணவகங்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்றும், இதனால் வியாபாரம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அநுராதபுரம் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான இந்திக்க அநுரகுமார தெரிவித்தார்.
தற்போதுள்ள எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக நகரங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நெருக்கடிக்கு தீர்வைக் காண அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post