இலங்கையில் தேசிக்காய் ஒரு கிலோகிராமின் விலை 2100 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி மலையகத்தின் பல பகுதிகளில் தேசிக்காய் ஒன்றின் விலை சுமார் 50 ரூபாவை எட்டியுள்ளதாக அந்த பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ் விலைக்கு தேசிக்காய்களை கொள்வனவு செய்து விற்பனை செய்ய முடியவில்லை என வர்க்கர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தேசிக்காய் அருவடை குறைந்துள்ளமையே விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் என தெரிவைக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் வரட்சியுடனான பகுதிகளிலேயே தேசிக்காய் செய்கை அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.
Discussion about this post