இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பணவீக்கம் எனப்படும் பொருள்களின் விலை அதிகரிப்பு வேகம் 50 வீதத்தை கடந்துள்ளது. இந்த மாதம் பணவீக்கம் 54.6% ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த மாதத்தில் உணவுப்பொருள்களின் விலைகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளன என்று தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உணவு அல்லாத பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 42.4 வீதத்தால் அதிகரித்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறையால் மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
அரிசி, தானிய வகைகள் உள்ளிட்ட ஏனைய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்தமையும் இந்த மாதத்தில் பணவீக்கம் அதிகரித்தமைக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
Discussion about this post