உக்ரைன் இராணுவம் நடத்திய நடந்த பயங்கர எறிகணை தாக்குதல்களை அடுத்து, பெல்கொரோட் நகரில் வசிக்கும் மக்களை ரஷ்யா வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
உக்ரைனிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெல்கொரோட் நகரம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று, இந்த நகரம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டதாகவும் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரை அடுத்து ரஷ்ய குடிமக்களுக்கு எதிரான மிக மோசமாக உக்ரைன் நடத்திய தாக்குதல் இது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post