கனேடிய அரசாங்கம் பெருந்தொகை ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றது. சுமார் 33 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏவுகணை இவ்வாறு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
கனேடிய இராணுவப் படையினர், உக்ரைன் படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கனடா, உக்ரைனுக்கு 8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது.
இதேவேளை, பிரித்தானியா, டென்மார்க், அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் உக்ரைனின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொள்ள உதவுவதாக அறிவித்துள்ளன.
Discussion about this post