Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உக்ரைனில் நூறாண்டு கால வழக்கத்தை மாற்றி, இடம்பெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

December 26, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
உக்ரைனில் நூறாண்டு கால வழக்கத்தை மாற்றி, இடம்பெற்ற கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நூறு ஆண்டுகளாக பின்பற்றி வரும் வழக்கத்தினை மாற்றி உக்ரைனில் கிறிஸ்மஸ் இந்த ஆண்டு (2023) கொண்டாடப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் நிகழும் போரின் மத்தியிலும் உக்ரைனில் நேற்றைய தினம் (25) கிறிஸ்மஸ் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

உக்ரைன் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பண்டிகை கொண்டாடுவது ரஷ்ய ஆர்த்தடக்ஸ் தேவாலயத்தின் வழிகாட்டுதலின்படியாகும்.

இதனால் உக்ரைனியர்கள் ரோமானிய கால ஜூலியன் கலண்டரின்படி ஜனவரி மாதம் 7 ஆம் திகதியன்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது “சிறப்பு இராணுவ நடவடிக்கை” எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது.

ukrine Celebrates Christmas today

ஆனால், இதற்கு அடிபணியாத உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

இரு தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் மற்றும் உடமை சேதங்களுடன், 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறான சூழலில் தான் உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உக்ரைன் இது தொடர்பாக முக்கிய முடிவினை எடுத்தது.

அதன்படி, கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அரசு, ரஷ்யாவை எதிர்க்கும் விதமாக கிரிகோரியன் கலண்டரின்படி உலகம் முழுவதும் கொண்டாடும் டிசம்பர் 25 அன்றே கிறிஸ்மஸ் இனைக் கொண்டாட முடிவெடுத்தது.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடித்து வந்த வழக்கத்தை மாற்றி முதன் முறையாக உக்ரைன் மக்கள் நேற்றையதினம் (25) கிறிஸ்மஸ் கொண்டாடியுள்ளனர்

ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னர், ரஷ்யாவை நினைவுபடுத்தும் தெருப்பெயர்களை நீக்குவதையும், அந்நாட்டுடன் தொடர்புள்ள புராதன கலைச்சின்னங்களை அகற்றுவதையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: #Christmas#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#UkraineChristmas#ukrine
Previous Post

மின்சாரதூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி

Next Post

சொக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம்

Next Post
சொக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம்

சொக்க வைக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.