Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா

August 11, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்: பதிலடி கொடுத்த ரஷ்யா
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உக்ரைன் மீண்டும் இரு ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அவற்றில் ஒன்று நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள கலுகா பகுதியிலும், மற்றொரு ட்ரோன் மாஸ்கோவின் முக்கிய சுற்றுச் சாலைக்கு அருகிலும் அழிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகா் மாஸ்கோவின் புகா் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் நேற்றுமுன்தினம் (09.08.2023) வெடிவிபத்து ஏற்பட்டது.

உக்ரைனுடன் நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக மாஸ்கோவில் அந்த நாடு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இராணுவத்துக்குத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 45 போ் காயமடைந்தனா். தொழிற்சாலையில் வெடிபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இந்த விபத்து ஏற்பட்டது என்றார் அவா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனினும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே அமைந்துள்ள 4 பிராந்தியங்களின் கணிசமான பகுதிகள் தற்போது ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்தப் பகுதிகளை மீட்பதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன், அவ்வப்போது ரஷ்ய எல்லைக்குள்ளும் தாக்குதல் நடத்தி வருகிறது

Tags: #Nato#Russia#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#UkraineWar
Previous Post

அமெரிக்காவிலும் பரவியது ‘கொவிட் 19’ வகை வைரஸ்

Next Post

ஆசிரியரின் கொடூர தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது மாணவன்

Next Post
ஆசிரியரின் கொடூர தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது மாணவன்

ஆசிரியரின் கொடூர தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது மாணவன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.