ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதி
விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய விசேட நீதியரசர்கள் குழாம்
தீர்மானித்துள்ளது.
குறித்த தினத்தில் இந்த தாக்குதல் குறித்து குற்றச்சாட்டு
முன்வைக்கப்பட்ட மௌலவிகள் உள்ளிட்ட 25 பேருக்கு அழைப்பாணை விடுக்கவும்
நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
270 பேர் கொல்லப்பட்ட மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த ஈஸ்டர்
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக குறித்த 25 பேருக்கு எதிராக 23,270
குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த
வழக்கில் கொலை, பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும்
வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவையும்
உள்ளடங்குகின்றன.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கை
விசாரிக்க செப்டம்பர் முதலாம் திகதி விசேட நீதியரசர்கள் குழாம்
நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post