இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் நாளை (25-03-2024) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நேற்று (23-03-2024) பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post