ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, ஊடகவியலாளர் பிரதிப் எக்னெலிகொட படுகொலை உட்பட பல்வேறு படுகொலைச் சம்பவங்களின் முக்கியசாட்சி ஒருவர் சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியிடம் அடைக்கலம் கோரிய சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு மனிதஉரிமை மீறல் சம்பவங்களின் முக்கிய நேரடிச் சாட்சியான அவர் மீதான கொலை முயற்சிகள் நடைபெறுவதாகக் குற்றம்சுமத்திய அவர், இன்று ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக பல சம்பவங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
Discussion about this post