இஸ்ரேலுக்கும் (Israel) ஹமாஸுக்கும் (Hamas) இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகள் கடைசி வாய்ப்பாக அமையலாம் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் (Anthony Blinken) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலானது அமெரிக்க (America) இராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், காசா (Gaza) பகுதியில் போர்நிறுத்த உடன்படிக்கையை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும் என்று பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்த உடன்பாடுஅத்தோடு, போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை எகிப்தின் (Egypt) கெய்ரோவில் (Cairo) இந்த வாரம் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த கலந்துரையாடலின் போது போர்நிறுத்த உடன்பாடு எட்டப்படுவதை உறுதி செய்ய அமெரிக்க இராஜாங்க செயலாளர் தூதரக மட்டத்தில் அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post