ஈரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதனால், இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதேவேளை, லெபனானின் தெஹ்ரான் ஆதரவு ஹில்புல்லா குழு இஸ்ரேலுக்குள் ஆழமாக சென்று தாக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலியப் படைகளுடன் ஹிஸ்புல்லா நாளாந்தம் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் உட்பட ஈரானின் அனைத்து அச்சுறுத்தல்களில் இருந்தும் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில் களமிறக்கியுள்ளது.
ஈரானின் தாக்குதலை தடுக்க மத்திய கிழக்கில் கூடுதல் போர்க்கப்பல்கள் மற்றும் கூடுதல் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
Discussion about this post