போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலில்(israel) தொழில்வாய்ப்பை தேடிச் சென்ற இலங்கையர் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது அவசரத் தாக்குதல்கள் ஏற்பட்டால் அவர்கள் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பதற்றம் அதிகரித்த நிலையில் வெளியான அறிவிப்பு
இஸ்ரேலின் வெளிநாட்டு பணியாளர்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் மேற்கண்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post