Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஏனையவை

இஸ்ரேலிய இராணுவத்தினத்தின் கொடூரத்தின் உச்சம்; வெளியான பகீர் காணொளி

December 28, 2023
in ஏனையவை
இஸ்ரேலிய இராணுவத்தினத்தின் கொடூரத்தின் உச்சம்; வெளியான பகீர் காணொளி
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது.

அந்த காணொளியில் இரண்டுசிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்தபடி நடந்துசெல்வதை வீடியோ காண்பிப்பதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

அதேசிறுவர்கள் நிர்வாணமான நிலையில் கைகளை உயர்த்திபடி காணப்படுவதை குறிப்பிட்ட வீடியோ காண்பிப்பதாக தெரிவித்துள்ள சிஎன்என், ஏனையை ஆண்களும் கைகளை உயர்த்தியபடி காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

எனினும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ள சிஎன்என், காசா நகரத்தில் உள்ள யார்முக் மைதானத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தனது ஜியோலொக்கேசன் காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தினரிடம் இது குறித்து கருத்தை பெற முயன்றதாகவும் எனினும் அதுபலனளிக்கவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இஸ்ரேலிய படையினர் பல பாலஸ்தீனியர்களை சுற்றிவளைத்து கைதுசெய்து நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளனர். சமீபத்தைய வீடியோவில் ஆண்கள் அரைநிர்வாணமான காணப்படுவதுடன், வீடியோவின் சில இடங்களில் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் நிலத்தில் அமர்ந்துள்ளனர்.

அதேசமயம் வேறு சிலர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் , இஸ்ரேலிய படையினர் அவர்களை சோதனையிடுகின்றனர். அதோடு பெண்கள் சிறுவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன

கால்பந்தாட்ட மைதானத்தில் முழுமையான ஆடையுடன் கண்கள்மூடப்பட்ட கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண்கள் மூவர் காணப்படுவதுடன் மைதானத்தில் இஸ்ரேலிய கொடியை காணமுடிகின்றது.

மேலும் அந்த மைதானத்தில் இராணுவ வாகனங்களையும் புல்டோசர்களையும் காணமுடிகின்றதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது..

Tags: #Israeli Army#Palestinians#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை: சினிமா முதல் அரசியல் வரை கொடிகட்டி பறந்தார்

Next Post

இலங்கையில் தலைதூக்கியுள்ள புதிய நோய்த்தாக்கம் : தடுப்பூசி வழங்கத் தீர்மானம்

Next Post
இலங்கையில் தலைதூக்கியுள்ள புதிய நோய்த்தாக்கம் : தடுப்பூசி வழங்கத் தீர்மானம்

இலங்கையில் தலைதூக்கியுள்ள புதிய நோய்த்தாக்கம் : தடுப்பூசி வழங்கத் தீர்மானம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.