புற்றுநோயால் பாதிக்கப்பட பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இளவரசி வெளியிட்டுள்ள பதிவில்,
நல்ல முன்னேற்றத்தைக் கண்டுவருகிறேன்
எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுவருகிறேன். ஆனால், கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது, நல்ல நாள்களும் இருக்கும், மோசமான நாள்களும் இருக்கும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒருபதிவை இட்டுள்ளார்.
புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, முதல் முறையாக சனிக்கிழமை நடைபெற்ற அரச படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கேத் மிடில்டன்.
இந்த வார இறுதியில் நடைபெறும் மன்னரின் பிறந்தநாள் அணிவகுப்பிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று காத்திருப்பதாகவும் வருங்காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க வேண்டும் என்று எனது குடும்பத்தினரும் விரும்புகிறார்கள்.
ஆனால், அவர்களுக்கும் நன்கு தெரியும், நான் சிகிச்சையிலிருந்து முழுக்க வெளியேறவில்லை என்பது என்றும் மிடில்டன் பதிவிட்டிருக்கிறார்.
42 வயதாகும் இளவரசியுமான கேத் மிடில்டன், புற்று நோய் காரணமாக இந்த ஆண்டு துவக்கம் முதலே பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் கேத் மிடில்டனின் பதிவுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்ட பதிவில்,
அந்த பதிவை மேற்கோள்காட்டி, வேல்ஸ் இளவரசியின் பேச்சு, ஒட்டுமொத்தமாக புற்றுநோயால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளதாகவும் அவரது வார்த்தைகளில், போராட்டமும், அதேநேரத்தில நம்பிக்கை மற்றும் அவரது வலிமையும் வெளிப்படுகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.
Discussion about this post