வவுனியா, தோணிக்கல்லில் இளம் தாய் ஒருவரின் உடல் கிணற்றில் இருந்து கடந்த 10ஆம் திகதி மீட்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளில் பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
32 வயதான இந்துஜா என்ற பெண்ணே கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இவர் 7 மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து இலங்கை திரும்பியிருந்தார்.
இந்துஜாவின் கணவரும், இரு பிள்ளைகளும் தற்போது லண்டனில் வசித்து வரும் நிலையில், கணவருடன் இந்துஜாவுக்கு முரண்பாடுகள் இருந்துள்ளமை, அதையடுத்தே அவர் இலங்கை திரும்பியமையும் தெரியவந்துள்ளது.
இந்துஜா கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த தினத்தில் அவர் கணவருடன் தொலைபேசியூடாக நீண்ட நேரம் உரையாடியமையும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் உள்ள பிரச்சினை காரணமாக இந்துஜா கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. விசாரணைகளின் போது சந்தேகத்துக்கிடமான எந்தத் தடயப் பொருள்களும் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post