யாழ்ப்பாணத்தில் பஸ்களில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை சந்தேகநபர் அபகரித்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொலைபேசிகளை பறிகொடுத்தவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியவர்கள் அலைபேசியை அடையாளம் காட்ட முடியும் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post