பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு எனப்படும் COPE
குழுவில் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆஜராகுமாறு இலங்கை விமான சேவைக்கு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு வலய இராஜாங்க அமைச்சினால்
COPE குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பிலான விடயங்களை
கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி இலங்கை விமான சேவைக்கு COPE குழு அழைப்பு
விடுத்திருந்தது.
இதனிடையே, எதிர்வரும் 6 ஆம் திகதி இலங்கை போக்குவரத்து சபையும் COPE
குழுவில் ஆஜராகவுள்ளது.
Discussion about this post