இலங்கையின் பொருளாதார வரலாற்றில் மற்றுமொரு கறுப்பு நாள் பதிவாகியுள்ளது என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பெற்றுக்கொண்ட ஒரு பில்லியன் பிணை முறி காலாவதியான போதிலும் அதற்கு செலுத்த போதியளவு பணம் கையிருப்பில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சர்கள் இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
பிழையான அபிவிருத்தித் திட்டங்களுக்காக கூடுதல் வட்டிக்கு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக 22 மில்லியன் மக்கள் இன்று எரிவாயு, எரிபொருள் இன்றி வீதிகளில் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளது என கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post