இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோரை இன்று சந்தித்துள்ளார்.
ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா வழங்கிய கடனுதவிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவுடனான சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார நிலைமை, இந்தியாவின் ஒத்துழைப்பின் அவசியம் என்பன தொடர்பாக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புகளின் பின்னர் தனது டுவீற்றரில் பதிவிட்டுள்ள பதிவொன்றில், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர், இலங்கைக்கான இந்தியாவின் ஒத்துழைப்புத் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
Discussion about this post