இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நேற்று(14) உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
காவன் ரத்நாயக்க ரணில் விக்ரமசிங்கவின் ஆளணி பிரதானியும் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் சகோதரராவார்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பட்டதாரியான இவர், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு
நிதி அமைச்சர் எனும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தை மத்திய வங்கி அங்கீகரித்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை வங்கியின் தலைவராக அதிபர் சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா பதவி வகித்ததுடன் நேற்று முன்தினம்(13) அவர் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பதவி
இதையடுத்தே புதிய தலைவர் நேற்று கடமைகளை பொறுப்பேற்ற காவன் ரத்நாயக்க, இதற்கு முன்னர் தேசிய அபிவிருத்தி வங்கி, துறைமுக அதிகார சபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தலைவர் பதவி வகித்துள்ளார்.
மேலும், கார்கில்ஸ் சிலோன் பி எல் சி நிறுவனம் மற்றும் டயலொக் நிறுவனம் ஆகியவற்றிலும் முக்கிய பதவிகளை காவன் ரத்நாயக் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post